ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வின் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் மழை அதிகமாக பெய்தது. அதன்பின் அதில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி தற்போது கரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வட தமிழகம் புதுச்சேரி மற்றும் தெற்கு ஆகிய பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து வருவதை அடுத்து வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திரா ஆகிய பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது. இதனிடையே முன்னதாக பெய்த மழை காரணமாக மயிலாடுதுறையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1000 வழங்க அரசாணை வெளியாகியுள்ளது. ரேஷன் கடைகளில் குடும்ப அட்டையை காண்பித்து ரூ.1000 நிவாரணம் எறும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இதற்காக ரூ.16.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சீர்காழியில் 99,518 குடும்ப அட்டைதாரர்களுக்கு, தரங்கபாடியில் 62,129 குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாளை முதல் ரேஷன் கடைகளில், மழையினால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவித்துள்ளார்.