ஸ்பெயின் நாட்டு மருத்துவர்கள் ரோபோக்கள் மூலம் பெண்களுக்கு விந்தணுவை செலுத்தி குழந்தை பெற வைக்கும் முயற்சி வெற்றிகரமாக நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ரோபோக்கள் மூலம் விந்தணுவை பெண்களின் உடலுக்குள் செலுத்தி கருத்தரிக்க வைக்கும் முயற்சிகள் ஸ்பெயின் நாட்டில் மேற்கொள்ளப்பட்டன. விந்தணுவை ரோபோக்கள் ஊசி மூலம் செலுத்தி பெண்கள் கருவுறுவது வெற்றி அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த முறையின் மூலம் இரண்டு பெண்கள் கர்ப்பமாகி குழந்தை பெற்றுள்ளதாகவும் எவ்வித சிக்கலும் இன்றி குழந்தை பிறந்தது என்றும் ரோபோக்களை பயன்படுத்தி விந்தணுவை செலுத்தும் முயற்சி வெற்றி பெற்றுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த ரோபோக்கள் மூலம் விந்தணுவை செலுத்தி குழந்தை பெற வைப்பது மிகவும் குறைந்த கட்டணத்தில் பயன்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.