‘ரோமியோ’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி!

Filed under: சினிமா |

கடந்த ஏப்ரல் 11ம் தேதி விஜய் ஆண்டனி நடித்த “ரோமியோ” திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தைப் பற்றி விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

விஜய் ஆண்டனி “பல நல்ல திரைப்படங்களை தவறாக விமர்சித்துக் கொல்லும் ப்ளு சட்டை மாறன் போன்ற சிலருக்கும், இவங்க சொல்றதையெல்லாம் உண்மை என்று நம்பி, ரோமியோ போன்ற நல்ல படங்களை கொண்டாடாமல், தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவி ஜீவிகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். என் அன்பு மக்களே ரோமியோ ஒரு நல்ல படம். போய் பாருங்க புரியும். ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிவிடாதீர்கள்” எனக் கூறியிருந்தார். இது சலசலப்பை உண்டாக்கியது. இப்போது படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஹா ஓடிடி தளத்தில் மே 10ம் தேதி முதல் இந்த படம் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.