“லால் சிங் சத்தா” ஓடிடியில் ரிலீஸ்!

Filed under: சினிமா |

அமீர்கானின் நடிப்பில் உருவான “லால் சிங் சத்தா” திரைப்படம் ஓடிடியில் ரிலீசாவது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் அமீர்கான் நடிப்பில் வெளியான “லால் சிங் சத்தா” திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. 1994ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான பாரஸ்ட் கம்ப் படம் ஆஸ்கர்களை அள்ளியது. அதுமட்டுமில்லாமல் இன்று வரை உலக சினிமா ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பெற்றுள்ள படமாக உள்ளது. இப்படத்தினை 25 ஆண்டுகள் கழித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் லால் சிங் சட்டா எனும் பெயரில் ரீமேக் செய்தார். லால் சிங் சத்தா திரைப்படம் ஆகஸ்ட் 11ம் தேதி ரிலீஸான நிலையில் அமீர்கானின் திரை வாழ்க்கையில் இதுவரை இல்லாத தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் ரிலீசாகி 6 மாதம் கழித்துதான் ஓடிடியில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது முன்னதாக நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.