லியோ குழுவுடன் காஷ்மீர் சென்ற நடிகர்கள்?

Filed under: சினிமா |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “லியோ.” இந்த படத்தை அக்டோபர் 19ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர். இப்போது “லியோ” திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்ததாக அறிவிக்கப்பட்டு போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இத்திரைப்படத்தின் முக்கியமானக் காட்சிகளை 60 நாட்கள் அங்கு தங்கி படமாக்கி வந்தது படக்குழு. இப்போது படத்தில் சில காட்சிகளை படமாக்க படக்குழு மீண்டும் காஷ்மீர் சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. அங்கு 10ம் தேதி வரை தங்கி விடுபட்ட சில காட்சிகளை படமாக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. படக்குழு காஷ்மீருக்கு சென்றாலும், அவர்களோடு எந்த நடிகர்களும் செல்லவில்லையாம். சில காஷ்மீர் வெளிப்புறக் காட்சிகள் படத்துக்கு தேவைப்படுவதால் அதை படமாக்க மட்டுமே படக்குழு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.