“லியோ” திரைப்படத்தில் இணைந்த நடிகை!

Filed under: சினிமா |

நடிகர் விஜய்யின் “லியோ” படத்தின் ப-ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது. படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கவுள்ளனர்.

காஷ்மீரில் 60 நாட்களுக்கும் மேல் படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், சென்று முக்கியமானக் காட்சிகளை படமாக்கி சென்னை திரும்பியுள்ளனர். இதையடுத்து சென்னையில் அடுத்த கட்ட ஷுட்டிங் தொடங்கி நடந்து வருகிறது. தற்போது யாரும் எதிர்பார்க்காத நடிகை ஒருவர் “லியோ” படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், நடிகை மடோனா செபாஸ்டியன் தற்போது “லியோ” படத்தில் இணைந்து நடித்து வருவதாக சமீபத்திய தகவல்கள் கிடைத்துள்ளது. அவருக்கு தமிழில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பதால் மீண்டும் நல்ல ஸ்கோப் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.