அக்டோபர் 19ம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் “லியோ.” படத்தில் திரிஷா, மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். படம் வெளியான 12 நாட்களில் 541+ கோடிகளை வசூலித்து மிகப்பெரிய ஹிட்டாகியுள்ளது.
ஆனால் தற்போது விடுமுறை தினங்கள் முடிந்துள்ளதால், கலெக்ஷன் குறைய ஆரம்பித்துள்ளது. படத்தின் வசூலை பெருக்கிட வெற்றிவிழாவை நவம்பர் 1ம் தேதி கொண்டாடவுள்ளது படக்குழு. இதற்காக அனுமதி கேட்டு காவல்துறையில் விண்ணப்பம் அளித்திருந்தனர். காவல்துறையும் நிபந்தனைகளோடு அனுமதி அளித்துள்ளது. இன்று மாலை நடக்கவுள்ள இந்நிகழ்ச்சியில் படக்குழுவினரோடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொள்ளப் போவதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் அது உண்மையில்லை என படக்குழு மறுத்துள்ளது.