லெஜண்ட் சரவணன் அரசியலுக்கு வருகிறாரா?

Filed under: அரசியல்,சினிமா |

தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் மக்களும் மகேசனும் அழைத்தால் அரசியலுக்கு வருவேன் என பேட்டியில் கூறியுள்ளார்.

இன்று கோவையில் நடந்த நிகழ்ச்சியில் சென்னை சரவணா ஸ்டோர் தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம், “தனது அடுத்த படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இயக்குனர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளிவரும். சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வருவது தற்போது டிரண்டாகியுள்ள நிலையில்தான் அரசியலுக்கு வர வேண்டுமா வேண்டாமா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” அவர் கூறியுள்ளார்.