17% ஊதிய உயர்வு பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு வழங்க இந்திய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்நிலையில் வாரத்திற்கு இனி 5 நாட்கள் மட்டுமே வேலை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
f
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழே இந்தியாவில் உள்ள அனைத்துப் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் இயங்கி வருகிறது. சமீபத்தில் பொதுத்துறை வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. அதன்படி, பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க இந்திய கூட்டமைப்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதாக தகவல்கள் வெளியானது. வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இந்திய வங்கிகள் சங்கத்திடம் இருந்து பெறப்பட்ட முன்மொழிவின் அடிப்படையில் ஜனவரி 1 முதல் வங்கிகளில் வாரம் 5 நாட்கள் மட்டுமே அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.