வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு? வானிலை மையம் தகவல்!

Filed under: தமிழகம் |

வானிலை ஆய்வு மையம் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம், “மே 22ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். அது வடகிழக்கு திசையில் நகர்ந்து மே 24ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல இடங்களிலும் புதுவையிலும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் கனமழை பெய்யும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கோடையில் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு மையம் உருவானால் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.