வசூலை குவித்த “சீதாராமம்”!

Filed under: சினிமா |

அனைத்து மொழிகளிலும் துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த வாரம் ரிலீசான திரைப்படம் “சீதாராமம்.” இத்திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.

“வாயை மூடி பேசவும்,” “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” உட்பட பல படங்களில் நடித்தவர் துல்கர் சல்மான். தொடர்ந்து தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தற்போது துல்கர் சல்மானின் “சீதாராமம்” திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸானது. படத்தை ஹனு ராகவபுடி இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். படத்தில் துல்கருடன் ராஷ்மிகா மந்தனா, மிருனாள் தாகுர் உட்பட பலரும் நடித்துள்ளனர். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ரிலீசான “சீதாராமம்” திரைப்படம் பாஸிட்டிவ்வான விமர்சனங்களை பெற்றுள்ளது. அதோடுமட்டுமல்லாமல் நல்ல வசூலையும் எட்டியுள்ளது. தமிழகத்தில் இப்போது இப்படத்துக்கு திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டுள்ளதாம். “சீதாராமம்” படத்தோடு வெளியான மற்ற படங்கள் எதுவும் சோபிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 10 நாட்களில் இந்த திரைப்படம் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாம். இதன் மூலம் “சீதாராமம்” திரைப்படம் பிளாக்பஸ்டர் லிஸ்ட்டில் சேர்ந்துள்ளது.