வடமாநில விவசாயிகள் போராட்டம் குறித்து அறிவிப்பு!

Filed under: அரசியல்,இந்தியா |

வடமாநில விவசாயிகள் சங்கம் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டம்- குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 23ம் தேதி முதல் டில்லியில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர் பிரிஜ்பூஷண் சரண்சிங் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அவருக்கு எதிராக மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் மல்யுத்த வீரர்கள் புதிய பாராளுமன்றத்தை நோக்கி செல்ல தொடங்கியதால் போலீசாரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். இதில், பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக், உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தரில் போட்டியிருந்த கொட்டகைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன. தேசத்திற்காக வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்தனர். அதன்படி, ஹரித்வாருக்கு பேரணியாக சென்று நதியில் பதக்கங்களை வீசுவோம் என்று சாக்சி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா தெரிவித்தனர். டில்லியில் போராடி வரும் மல்யுத்த வீரர்கள் ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் வென்ற பதக்கங்களை கங்கையில் வீசப் போவதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் மல்யுத்த வீரர்களின் குறைகளை அரசு நிவர்த்தி செய்ய வேண்டும். இல்லையென்றால் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக வரும் ஜூன் 9ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று வடமாநில விவசாயிகள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “மல்யுத்த வீரர்களின் குறைகளை அரசு நிவர்த்தி செய்து, பிரிஜ்பூ ஷன் சிங்- ஐ கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் வரும் ஜூன் 9ம் தேதி மல்யுத்த வீரர்களுடன் டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவோம்“ என்று அறிவித்துள்ளார்.