நடிகர் வடிவேலு “சந்திரமுகி” ஷூட்டிங்கில் டார்ச்சர் செய்ததால் இயக்குனரால் விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
காமெடி நடிகரான வடிவேலு மீது அடுக்கடுக்கான தொடர் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணமாக உள்ளது. அவர் படப்பிடிப்புக்கும் சரியாக வராததாக கூறப்படுகிறது. நடிகர் வடிவேலு ஷூட்டிங்கில் ஒத்துழைப்பு கொடுக்காதது என தொடர்ந்து இயக்குனர், மற்றும் தயாரிப்பளர்களுக்கு தொடர் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் வடிவேலு “சந்திரமுகி 2” திரைப்படத்தின் ஷூட்டிங்கிற்கு வந்ததும் தன்னுடைய காட்சிகளை முதலில் எடுக்க வேண்டும் என்று இயக்குனர் பி.வாசுவை தொந்தரவு செய்துள்ளார். முதலில் எடுத்து கூறியும் கேட்காத வடிவேலு பல முறை டார்ச்சர் செய்ததால் கோபமடைந்த இயக்குனர், “நீ நடிக்க வேண்டாம், இப்பவே இங்கிருந்து கிளம்பிடு” என்று கூறிவிட்டாராம்.