கோவை, மே 19
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தமிழக – கேரள எல்லையில் ஆனைக்கட்டி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகள் சூழ்ந்த இந்த பகுதியில் காட்டுயானைகள், கரடி, சிறுத்தை உட்பட பல்வேறு வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.
இந்த அடர்ந்த வனப்பகுதிக்குள் சேம்புகரை, தூமனூர், கொண்டனூர், ஆலமரம்மேடு, ஜம்புகண்டி, காட்டுச்சாலை, சுண்டிவழி, வடக்கலூர், பண பள்ளி, மாங்கரை, போன்ற பத்துக்கு மேற்பட்ட மலைக்கிராமங்களில் ஆதிவாசி மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர், இப்பகுதியில் 1200 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 2600 க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில் பலர் கூலி வேலைக்கு செல்பவர்கள், சிலர் மரவள்ளி கிழங்கு, மா, பப்பாளி, பயிர்களை சாகுபடி செய்து அருகிலுள்ள கேரளாவுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றார்கள்.
இதில், ஒரு சிலர் தடாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள செங்கல் சூளைகளில் வேலை செய்து வருகிறார்கள். தற்போது, கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் முடங்கி போய் இருந்தனர். வறுமையில் வாடும் மலைவாழ் மக்களின் சூழ்நிலையும் மற்றும் அவர்களுக்கு அத்தியவசிய தேவைகளை தெரிந்துகொண்ட கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் வி. சி. ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய், சர்க்கரை, மற்றும் மளிகை பொருட்களை ஆதிவாசி மக்களுக்கு வாரி வழங்கினார். அத்துடன் மலைவாழ் ஆதிவாசி மக்களுக்கு வெற்றிலை, பாக்குடன் சுமார் 1500க்கும் மேற்பட்ட ஆதிவாசி மக்களுக்கு கறி விருந்து அளித்தார். இந்த நிவாரண வழங்கும் நிகழ்ச்சியில் பெரியநாயக்கன்பாளையம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கோவனூர் துரைசாமி, பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய சேர்மன் நர்மதா துரைசாமி, மாவட்ட கவுன்சிலர்கள் சரவணகுமார், அபிநயா, ஒன்றிய கவுன்சிலர் மாணிக்கம், ஊராட்சி தலைவர்கள் சவுந்திர வடிவு, ஆனந்தன், ரவி, கே.பி. ரங்கராஜ், இவர்களுடன் ஆறுக்குட்டி எம்.எல்.ஏ.வின் நேர்முக உதவியாளர் நாராயணசாமி மற்றும் ஊராட்சி செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், திரளாக கலந்து கொண்டனர்.
எதிர்க்கட்சியினரின் வலைக்குள் சிக்கிய லோக்கல் தினசரிகள் மலைக்கிராம மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று பொய்ச் செய்திகளை பரப்பினாலும் அதை கண்டுகொள்ளாமல் தொகுதி மக்களின் வளர்ச்சியே என் உயிர் மூச்சு என்று செயல்படும் ஆறுக்குட்டி எம்.எல்.ஏ கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பொதுமக்களுக்கு நேரில் சென்று தன் கைப்பட 50000 குடும்பங்களுக்கு மேல் நிவாரண பொருட்கள் பெட்டிகளை வாரி வாரி வழங்கியுள்ளார். உண்மையிலேயே மனிதருள் மாணிக்கம் என்பதில் பெருமை கொள்கிறது கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி.