போக்குவரத்து போலீசார் கடந்த 2020 மற்றும் 2021ம்- ஆண்டுகளை காட்டிலும் 2022ம் ஆண்டில் வாகன விபத்துகள் குறைந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும், சாலையில் பயணிக்கும் போது வாகன ஓட்டிகள் விபத்தைக் குறைக்கும் நோக்கில், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதத் தொகை அதிகரித்து ஒரு அறிக்கை வெளியிட்டது. சமீபத்தில் தமிழகத்திலும் இது அமல்படுத்தப்பட்டது. ஆனால், இதையும் மீறி சிலர் பயணித்து, விபத்தில் சிக்குகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இதுகுறித்து அறிக்கையை தமிழக போக்குவரத்து காவல்துறை வெளியிடும், அவ்வகையில், கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளை காட்டிலும் 2022ம் ஆண்டில் வாகன விபத்துகள் குறைந்துள்ளதாகவும், விபத்தினால் ஏற்படும் பலி எண்ணிக்கையும் 11% குறைந்துள்ளதாக போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, 2020ம் ஆண்டு 559 விபத்துகளும், 566 பேர் உயிரிழந்துள்ளதாகவும்; 2021ம் ஆண்டு 566 விபத்துகளும், 499 பேர் பலியானதாகவும்; 2022ம் ஆண்டு 575 விபத்துகள் நடந்துள்ளதாகவும், 507 பேர் பலியானதாகவும் தெரிவித்துள்ளது.