வானதி சீனிவாசனின் கோரிக்கை!

Filed under: அரசியல்,தமிழகம் |

கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் துணை முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சர்களின் பதவிகள், பட்டியல் இனத்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும் போது, “திமுக அமைச்சரவையில் பெரும் மாற்றங்கள் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாராகி வருவதாக செய்திகள் வருகின்றன. பட்டியலினத்தவர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவது தான் உண்மையான சமூக நீதி ஆகும். இந்த அமைச்சரவை மாற்றத்தில் பட்டியலினத்தவர்களுக்கு துணை முதலமைச்சர் மற்றும் முக்கிய துறைகளின் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்திகிறேன்” என கூறியுள்ளார்.