வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

Filed under: தமிழகம் |

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கணித்துள்ளது.

காலையிலிருந்து வெயில் கொளுத்தி வந்தாலும் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவில் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. சென்னை வானிலை மையம் 17 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என்று கணித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாம். அதேபோல் திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என கணித்துள்ளது. மேற்கண்ட 17 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்