வானிலை எச்சரிக்கை!

Filed under: தமிழகம் |

வானிலை ஆய்வு மையம் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றின் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுதும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஏற்கனவே ஒரு சில மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நீலகிரி, தேனி, கோவை, திண்டுக்கல், சிவகங்கை, மற்றும் புதுக்கோட்டை ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்தில் மேற்கண்ட ஆறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.