வானிலை மையத்தின் அறிவிப்பு!

Filed under: தமிழகம் |

வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் ஜூன் 20ம் தேதி வரை வெயிலும் கொளுத்தும் அவ்வப்போது மழையும் பெய்யும் என அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கோடை காலம் முடிவுக்கு வந்து தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் ஜூன் 20ம் தேதி வரை லேசான மழை பெய்யும், அதே நேரத்தில் ஜூன் 18ம் தேதி வரை வெயில் அதிகமாக இருக்கும். தென்னிந்திய பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்க சுழற்சி மாரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்கள் காரைக்கால் மற்றும் புதுவை ஆகிய பகுதிகளில் ஜூன் 20ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். ஆனால் அதே நேரத்தில் ஜூன் 18ம் தேதி வரை இயல்பை விட அதிகபட்சமாக இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வெப்பம் காணப்படும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மாலை மற்றும் இரவு வேளையில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளது.