வானிலை மையத்தின் அலெர்ட்!

Filed under: தமிழகம் |

அடுத்து வரும் 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கடுமையான வெயிலும் இருக்கும், மழையும் பெய்யும் என்று வானிலைமையம் தெரிவித்துள்ளது.

நாளை முதல் மே 26ம் தேதி வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் வெப்ப சலனம் காரணமாகவும் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மீதமான மழை முதல் கன மழை வரை பெய்யக்கூடும். மேலும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை வர பெய்யும். ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 38 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெயில் சுட்டெரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.