வானிலை ஆய்வு மையம் அரபிக் கடலில் சூறாவளி காற்று வீசும் வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.
தென்கிழக்கு அரபி கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றியுள்ளது. இதையடுத்து லட்சத்தீவு, அரபிக் கடலின் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும் என்றும் எனவே இந்த பகுதிகளுக்கு இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய மூன்று நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சில இடங்களில் காலை நேரத்தில் பனிமூட்டம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மாநிலத்தின் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.