பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா அஜீத் 62 திரைப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியுள்ளது உறுதியாகியுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
அஜீத்தின் 62வது திரைப்படத்தை சில மாதங்களுக்கு முன்னர் வெளியான அப்டேட்டின்படி லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இப்படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது இறுதிகட்டத்தில் படத்தின் கதையில் அஜீத் மற்றும் லைகா ஆகிய இரு தரப்புக்குமே திருப்தி இல்லாததால் விக்னேஷ் சிவனை இத்திரைப்படத்திலிருந்து நீக்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்காக லைகா நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் அதற்கு லைகா நிறுவனம் செவி சாய்க்கவில்லை என்றும் கூறப்படுகிறது.