விக்ரம், சூர்யா படங்களின் ரிலீஸ் தேதி மாற்றமா?

Filed under: சினிமா |

விக்ரம், பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘தங்கலான்.’ இத்திரைப்படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

நவம்பர் 1ம் தேதி “தங்கலான்” படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 26ம் தேதி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது வி எஃப் எக்ஸ் பணிகள் நிறைவடையாத காரணத்தால் “தங்கலான்” திரைப்படம் மேலும் தள்ளிபோகும் என கூறப்பட்டது. ஏப்ரல் 14ம் தேதி ரிலீசாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ஏப்ரலில் ரிலீசாகவிருந்த சூர்யாவின் “கங்குவா” திரைப்படம் ஆகஸ்ட் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த இரண்டு படங்களையும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.