தனது உடல் மொழியால் பல வருடங்களாக தமிழ் சினிமாவின் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் வடிவேலு. கடந்த சில ஆண்டுகளாக அவர் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தாலும், சமூக ஊடகங்களில் மீம்களின் மூலமாக நிறைந்திருக்கிறார்.
ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்த “நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்” படம் தோல்வி அடைந்தது. முற்றிலும் மாறுபட்ட ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தில் அவர் மாரி செல்வராஜின் “மாமன்னன்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் ஜூன் 29 அன்று வெளியாக உள்ளது. படத்துக்கு பெரியளவில் மக்களிடம் எதிர்பார்ப்பு நிலவுகிறது. படத்தின் புரமோஷனுக்காக அவர் அளித்த ஒரு நேர்காணலில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் உதயநிதி ஸ்டாலின் தான் முதன் முதலாக தயாரித்த “குருவி” திரைப்படத்தில் தன்னை நடிக்க அழைத்ததாகவும், ஆனால் அந்த கதாபாத்திரம் தனக்கு தீனிபோடும் விதமாக இல்லை என்பதால் நடிக்க மறுத்ததாகவும் கூறியுள்ளார். அதன் பின்னர் அந்த படத்தில் விவேக் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார்.