தமிழ் இயக்குனர் அட்லி இயக்கத்தில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் “ஜவான்” திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸுக்கான வேலைகள் நடந்து வருகின்றன. இத்திரைப்படத்தில் தமிழ் பிரபலங்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில் சென்னையில் நேற்று நடைபெற்ற ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய அட்லி “இந்த படம் நடக்க காரணமே விஜய் அண்ணாதான். அவர் என்னை நிறைய ஊக்கப்படுத்தினார். என்ன நடந்தாலும் வேலையில் கவனம் செலுத்த வேண்டும். நிறைய நெகட்டிவிட்டி வரும். அதையெல்லாம் விஜய் அண்ணா சொல்வது போல ‘இக்னோர் நெகட்டிவிட்டி நண்பா’ எனக் கடந்து போக வேண்டும்” எனக் கூறியுள்ளார்.