சில் அரசியல் பிரபலங்கள் விஜய் கட்சியில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் போட்டியிட உள்ளது. இக்கட்சியின் முதல் மாநாடு விரைவில் நடைபெற உள்ளது. இந்த முதல் மாநாட்டில் பிற கட்சியில் உள்ள சில அரசியல் கட்சி தலைவர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏசி சண்முகம், தடா பெரியசாமி, பண்ருட்டி ராமச்சந்திரன், பழ கருப்பையா, தமிழருவி மணியன் ஆகியோர் விஜய் கட்சியில் இணையப் போவதாக விஜய் கட்சியின் முதல் மாநாட்டில் இவர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமின்றி இரண்டு திராவிட கட்சியில் இருக்கும் சில தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர்களிடமும் விஜய் கட்சியில் இணைய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இத்தகவல்கள் எல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது விஜய் கட்சியின் முதல் மாநாட்டின் போது தான் தெரியவரும்.