விஜய் படத்தின் ஆடியோ உரிமத்தை பெற்ற பிரபல நிறுவனம்!

Filed under: சினிமா |

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், தற்போது The Greatest Of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர்களின் சகோதரி பவதாரணி மறைவையடுத்து ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இப்போது மீண்டும் தொடங்கி சென்னை தாம்பரத்தில் நடந்து வருகிறது. படம் ஜூன் அல்லது ஆகஸ்ட்டில் ரிலீசாகும் என கூறப்படுகிறது. படத்தில் விஜய்யும் யுவனும் இணைந்து “புதிய கீதை” படத்துக்குப் பின் பணியாற்றுகின்றனர். இதனால் படத்தின் ஆடியோ மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இத்திரைப்படத்தின் ஆடியோ உரிமத்தை டி சீரிஸ் நிறுவனம் 18 கோடி ரூபாய் கொடுத்து கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.