நடிகர் விஜய் நடித்து வரும் 67வது திரைப்படத்தின் தலைப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகுமென படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
அதன்படி இப்படத்தின் டைட்டில் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ பெரியளவில் வைரலாகி வருகிறது. படத்திற்கு “லியோ” என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இரண்டு நிமிடங்களுக்கும் மேலான இந்த படத்தின் டிரெயிலர் வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இப்படம் இவ்வாண்டு அக்டோபர் 19ம் தேதி வெளியாகுமென இந்த வீடியோவில் அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய், திரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.