விஜய் படத்திலிருந்து விலகிய தெலுங்கு தயாரிப்பாளர்!

Filed under: சினிமா |

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய், தற்போது “தி கோட்” படத்தில் நடித்து வருகிறார். அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் இத்திரைப்படத்தில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இத்திரைப்படத்துக்குப் பின் இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு விஜய் அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்துள்ளார். அவரின் கடைசி படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இப்போது அந்த இயக்குனர் ஹெச் வினோத்தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. படத்தை தயாரிக்க இருந்த டிவிவி நிறுவனத்தின் தானய்யா அந்த படத்தில் இருந்து விலகியுள்ளதாகவும், படத்தைத் தயாரிக்கும் பொறுப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.