விஜய் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன்!

Filed under: சினிமா |

 

நடிகர் விஜய்யின் தி கோட் திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இத்திரைப்படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்க வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. அந்த மூன்று வேடங்களுக்கும் மூன்று கெட்டப்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் வேலைகள் நடந்துவருகிறது. படத்தின் அனைத்து மொழிகளுக்குமான சேட்டிலைட் உரிமையை ஜி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடந்துவருகிறது. இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் இறுதியில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம். ஜூலை இறுதியில் படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் ரிலீசாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்பாடலை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளதாக சொல்லப்படுகிறது.