தயாரிப்பாளர் லலித்குமார் “லியோ” திரைப்படம் ரூ.1,000 கோடி வசூலை தொடாது என்று கூறியுள்ளார்.
விஜய்யின் “லியோ” திரைப்படம் ரிலீஸுக்கு முன்னர் “ஜெயிலர்” திரைப்படத்தின் வசூலை முறியடிக்கும் என்றும், ஆயிரம் கோடி வசூல் செய்யும் என்றும் கூறப்பட்டது. மேலும் இத்திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 148 கோடி என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள் இருப்பதால் இந்த படம் ஆறு நாட்களில் 500 கோடியை தாண்டும் என்றும் மொத்த வசூல் ஆயிரம் கோடியை தொடும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித் பேட்டியில், “லியோ” திரைப்படம் ஆயிரம் கோடி வசூலை நெருங்குமென்று நான் நினைக்கவில்லை, காரணம் வட இந்தியாவில் நாங்கள் எதிர்பார்த்த வசூல் இல்லை. அதிகாலை 4 மணி காட்சிக்கு நிறைய முயற்சி செய்தோம். ஆனால் அது நடக்கவில்லை, அதனால் வசூல் குறைந்து விட்டது” என்று அவர் கூறினார்.