விஜய் பட டைட்டிலில் வதந்தி!

Filed under: சினிமா |

கடந்த சில நாட்களாக நடிகர் விஜய் திரைப்படத்தின் டைட்டில் பற்றி வதந்தி ஒன்று பரவி வருகிறது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்து விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார். இந்த படமும் ஒரு மல்டிஸ்டார் படமாகவே உருவாக உள்ளது. சமூகவலைதளங்களில் இத்திரைப்படத்துக்கு ‘ராய்ஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால் அதை படக்குழுவினர் மறுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது முக்கியமான சில ஆக்‌ஷன் காட்சிகளை லோகேஷ் படமாக்கி வருகிறார். அதன் பிறகு காஷ்மீரில் படத்தின் பெரும்பகுதியை படமாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.