விஜய் பட ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல தயாரிப்பாளர்!

Filed under: சினிமா |

நடிகர் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் “வாரிசு” திரைப்படத்தின் தமிழ் ரிலீஸ் உரிமையைக் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கைப்பற்றியுள்ளார். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாவது படக்குழு உறுதி செய்துள்ளது.

“வாரிசு” திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிக்கின்றனர். படம் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் “வார்சாடு” என்ற பெயரில் உருவாகி வரும் இத்திரைப்படம் தமிழில் ரிலீசாகும் அதே நாளில் தெலுங்கிலும் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்துக்கு போட்டியாக பிரபாஸ் நடிக்கும் “ஆதிபுருஷ்” திரைப்படம் ரிலீசாகிறது. இந்நிலையில் இப்போது பாலகிருஷ்னாவின் “வீரசிம்மா ரெட்டி” திரைப்படமும் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று தீபாவளியை முன்னிட்டு வெளியான போஸ்டரில் பொங்கல் ரிலீசை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்நிலையில் “வாரிசு” படத்தின் தமிழக விநியோக உரிமையை மாஸ்டர் தயாரிப்பாளர் லலித்குமார் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.