விஜய் பாடிய தெம்மாங்கு டூயட்!

Filed under: சினிமா |

vjsangசொந்தக்குரலில் நிறைய குத்துப்பாட்டுக்களை பாடி அசத்தியிருக்கிறார் விஜய். ‘ஜில்லா’ படத்தில் முதல் தடவையாக கிராமத்து தெம்மாங்கு டூயட்டை டி.இமான் இசையில் பாடியிருக்கிறார். “இப்பாட்டின் டிராக்கை (மெட்டு) ஒரு மாதத்துக்கும் முன்னதாகவே விஜய்யிடம் கொடுத்துவிட்டேன். பலமுறை கேட்டு பாடி டிரெய்னிங் எடுத்தார். ஸ்ரேயாகோஷல் பாடிய பின் ரெக்கார்டிங் தியேட்டருக்கு வந்தார் விஜய். அன்று ஞாயிற்றுக்கிழமை, அருமையாக பாடிக்கொடுத்தார். மதுரை கதைக்களத்தில் அமைந்த கிராமியப்பாட்டை முதல் தடவையாக பாடினார்…” என்றார் டி.இமான்.