விஜய் பிறந்த நாளில் 2 படங்கள் அப்டேட்

Filed under: சினிமா |

நடிகர் விஜய் பிறந்த நாளில் 2 திரைப்படங்களின் அப்டேட்களை வெளியிடப்படப் போவதாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் “லியோ.” இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரைப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். திரிஷா கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாகிறது. ஜூன் 22ம் தேதி விஜய்யின் 49வது பிறந்த நாள் என்பதால் ‘லியோ’ பட புதிய கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகவுள்ளது. இந்த வீடியோவுக்கு கமல்ஹாசன் பின்னணி குரல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், இப்படத்திற்குப் பின், நடிகர் விஜய், வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘விஜய் 68 ‘வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது. அதனால், விஜய் பிறந்த நாளில், விஜய் 68 படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கு “சிஎஸ்கே” என தலைப்பு வைக்க வெங்கட்பிரபு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜய் ரசிகர்கள் அவரது பிறந்த நாளில் நாளில் 2 திரைப்பத்தின் அப்டேட்களை காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.