நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் சமீபத்தில் “டிரிக்கர்” என்ற குறும்படத்தை இயக்கினார்.
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயும் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தமிழ் சினிமாவின் புதிய இயக்குனராக சஞ்சய் அறிமுகமாகவுள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் ஹீரோவாக பலரது பெயர்கள் பேசப்பட்டது. அதேபோல் இப்படத்திற்கு முதலில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் இசையமைப்பார் என்று கூறப்பட்டது. அனிருத் இப்படத்திற்கு இசையமைப்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் மல்லுவுட் ஹீரோ துல்கர் சல்மான் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஜேசன் சஞ்சயுடன் இணையும் துல்கர் சல்மான் திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சினிமா மேக்கிங் மற்றும் டைரக்சன் பற்றி லண்டனின் படித்துள்ள ஜேசன் சஞ்சய், யாரிடமும் உதவி இயக்குனராகப் பணியாற்றாத நிலையில் இவரது முதல் படத்தை லைகா பிரமாண்டமாக தயாரிக்க உள்ளதால் இப்படத்தில் நடிகர்கள், டெக்னீஷியன்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.