விஜய் மக்கள் இயக்கம் யூட்யூப் சேனல்!

Filed under: சினிமா |

நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக அதிகாரப்பூர்வமாக யூடியூப் சேனல் மற்றும் சமூக வலைதளங்கள் இன்று முதல் தொடங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் அவரது பெயரில் மக்கள் இயக்கத்தை தொடங்கி நடத்தி வருகிறார். கடந்த உள்ளாட்சி தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு பல இடங்களில் வெற்றி பெற்றனர். நீண்டகாலமாக தளபதி விஜய் மக்கள் இயக்கம் இயங்கி வந்தாலும் இதுவரை அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனலோ, சமூக வலைதள கணக்குகளோ இல்லாமல் இருந்தது. இன்று தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பேரில் யூட்யூப் சேனல் மற்றும் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. இதன் முதல் வீடியோவை இன்று விஜய் காணொளி மூலமாக வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள தளபதி விஜய் மக்கள் இயக்கம் “தளபதி அவர்களின் நல்லாசியுடன் இன்று அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் தளபதி குருதியகம் இரத்த தானம் செயலி, அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கங்கள் மற்றும் உறுப்பினர் சேர்கை செயலி ஆகியவை இனிதே துவங்கி வைக்கப்பட்டது” என்று அறிவித்துள்ளது.