விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்க தொழிற்சங்கம் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் கடலூரில் தற்போது 3-வது ஆண்டாக தொழிற்சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் புஸ்சி ஆனந்த் ‘தமிழகம் முழுவதும் விரைவில் விஜய் மக்கள் இயக்கத்தின் தொழிற்சங்கம் துவங்கப்படும், அதன்மூலம் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும். இரவு நேர பயிலகம், சட்ட ஆலோசனை மையம், விலையில்லா உணவகத்தை தொடர்ந்து தற்போது தொழிற்சங்கமும் விரிவாக்கம் என்று தெரிவித்தார்.