நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் பங்கேற்பேன் என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளரிடம், “10 ஆண்டுகளாக எந்த பிரச்னையும் நடக்கவில்லை. விடுதலை புலிகள் அமைப்பு மீது ஏன் தடை விதிக்க வேண்டும்? தடையை நீக்கி விட்டால் என்ன நடக்கும்? நாங்கள் வேகமாக வளர்ந்து விடுவோம் என்று பயம் தான். விடுதலை புலிகள் என்ற பெயருக்கே பயமா? கடந்த 10 ஆண்டுகளில் இதை சாதித்துள்ளோம் எனக் கூறி பாஜகவால் மக்களிடம் ஓட்டு கேட்க முடியவில்லை, பாகிஸ்தான், பசு மாடு, பாரத மாதா இது தவிர பாஜகவுக்கு என்ன தெரியும்? தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் பங்கேற்பேன்” என்று கூறினார். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கூட்டணியா? என கேட்டதற்கு, “வெயிட்டிங்” என்று ஒரு வரியில் சீமான் பதிலளித்தார்.