இம்மாதம் 31ம் தேதி திரையரங்குகளில் வெளிவர தயாராக இருக்கும் “விடுதலை” திரைப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் “ஏ” சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வெற்றிமாறனின் இயக்கத்தில், சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் “விடுதலை”.
இந்த படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளிவந்த நிலையில் சென்சார் அதிகாரிகள் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளதால் 18 வயது உட்பட்டோர் திரையரங்குகளில் இத்திரைப்படத்தை பார்க்க முடியாது. அது மட்டுமின்றி இந்த படத்தை தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்ப அனுமதி கிடைக்காது. இந்நிலையில் “விடுதலை” திரைப்படத்தின் ரன்னிங் டைம் 150 நிமிடங்கள் என்றும் அதாவது 2 மணி நேரம் 30 நிமிடங்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சூரி, விஜய் சேதுபதி, கௌதம் மேனன், பவானிஸ்ரீ, பிரகாஷ்ராஜ், ராஜீவ் மேனன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது.