விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது!

Filed under: தமிழகம் |

பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் தொடங்கி அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் நடைபெற்றது. இன்றுடன் தேர்வுகள் முடிவடையும் நிலையில், நாளை முதல் ஜனவரி 1ம் தேதி வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில பள்ளிகள் விடுமுறை காலத்திலும் சிறப்பு வகுப்புகள் நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் புதிய உத்தரவை வெளியிட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை, விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும், மாணவர்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டை கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.