விநாயகர் சிலை கரைக்க இனி கட்டணம்!

Filed under: தமிழகம் |

இந்தியாவில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகையில் முக்கியமானது விநாயகர் சதுர்த்தி.

விநாயகர் சதுர்த்தியின்போது சிலைகளை ஆறு, கடல் உள்ளிட்ட நீர்ப்பகுதியில் மக்கள் கரைத்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தியின் போது சிலைகள் கரைப்பதற்கு அனுமதி வழங்க கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என தமிழக சுற்றுச்சூழல்துறை செயலாளர் தலைமையிலான குழுக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அனுபமதி வழங்க வசூலிக்கப்படும் கட்டணத்தை அறிவிக்கப்பட்ட நீர் நிலைகள் பராமரிப்புக்கு செலவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அறிவிக்கப்படாத நீர் நிலைகளில் கரைத்தால் விதிக்கப்படும் அபராதம் பற்றி விளம்பரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.