வியாபாரி முதல்வருக்கு கடிதம் எழுதிவிட்டு தற்கொலை!

Filed under: இந்தியா |

முதலமைச்சருக்கு கடிதம் எழுதிவிட்டு வியாபாரி ஒரு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடந்து வருகிறது. அங்குள்ள குண்டூரைச் சேர்ந்த வர்மா (40) அதே பகுதியில் வசிக்கும் பைனான்சியர் ஒருவரிடம் கடந்த 2010ம் ஆண்டு ரூ.5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அக்கடனை வர்மா திருப்பிச் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், பைனான்சியர் இன்னும் பணம் கொடுக்க வேண்டும் என தொடர்ந்து வர்மாவுக்கு தொந்தரவு செய்துள்ளார். இதனால், மனம் உடைந்த வர்மா சில நாட்களாக பைனாசியர் போன் செய்தால் அதை எடுக்காமல் இருந்துள்ளார். ஆனால், பைனான்சியர் நேரடியாக வீட்டிற்குச் சென்று அவரது மனைவியை மிரட்டியுள்ளார். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான வர்மா, நேற்றிரவு தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வர்மா எழுதிய கடிதத்தைக் கைப்பற்றினர். அதில், பைனான்சியரிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டேன். ஆனாலும் அவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து மிரட்டி வருகிறார். அவர் மீது நடவடிக்கையெடுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெகன் மோகனுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.