விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்குதான் -டாஸ்மாக்கில் குறைய ஆரம்பித்த கூட்டம்!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் 5 நாட்களுக்குப் பின் கூட்டம் குறைய ஆரம்பித்துள்ளது.
தமிழகத்தில் மே 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அதை மூட உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து அந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை வாங்கி மீண்டும் திறந்தது. இதையடுத்து மே 16 ஆம் தேதி முதல் மீண்டும் கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
தொடக்கத்தில் இரண்டு நாட்களில் மிக அதிகமாக மக்கள் கூட்டம் டாஸ்மாக் கடைகளில் காணப்பட்ட நிலையில் அதற்கடுத்த நாட்களில் கூட்டம் மெல்ல மெல்லக் குறைய ஆரம்பித்துள்ளது. இப்போது வழக்கமான வியாபாரத்தைக் கம்மியாகவே பல இடங்களில் நடப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் மதுப்பிரியர்கள் பலருக்கு கடந்த இரண்டு மாதங்களாக வேலை இல்லாததால் அவர் கையில் பணப்போக்குவரத்து இல்லாதது என்பதே சொல்லப்பட்டு வருகிறது.