சென்னை ஐகோர்ட் விஜய்சேதுபதியின் அடுத்த திரைப்படத்தை பற்றிய முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
சீனுராமசாமி இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான “இடம் பொருள் ஏவல்” திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி பல ஆண்டுகள் ஆகியும் ஒரு சில பொருளாதார பிரச்சினை காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இந்நிலையில் இப்படம் குறித்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தற்போது இப்படத்தை ரிலீஸ் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிக்க உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் தெரிவித்துள்ளார். மிக விரைவில் “இடம் பொருள் ஏவல்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.