இதை பற்றி ஜெயம் ரவி கூறும் பொது ‘ எனக்கு சிறு வயதில் இருந்தே விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் அதிகம் .அந்த ஆர்வம் என்னுள் தணியாத ஊக்கத்தையும் , ஒழுக்கத்தையும் கற்று தந்தது என்றால் மிகை ஆகாது . நான் என்னுள் ஒரு விளையாட்டு வீரன் இருப்பதை உணருகிறேன் . ஒரு விளையாட்டு வீரனுடைய மன நிலையில் தான் நான் வெற்றி தோல்வி இரண்டையும் எதிர் கொள்கிறேன் .இந்த பக்குவத்துக்கு என்னுடைய விளையாட்டு ஆர்வம் மிகவும் உதவியது . விளையாட்டு துறைக்காகவும் , விளையாட்டு [போட்டியாளர்களை ஊக்குவிக்கவும் என்னுடைய கணிசமான நேரத்தையும் , சக்தியையும் செலவிட இருக்கிறேன் . எனக்கு பெரும்பாலான படங்களில் விளையாட்டு வீரனாக பாத்திரம் அமைவது திட்டமிட பட்டது அல்ல. நான் எனக்கு சவாலான எந்த பாத்திரத்தையும் ஏற்று நடிக்க தயாராகவே உள்ளேன் .
தற்போது நடித்து வரும் சமுத்திர கனியின் இயக்கத்தில் உருவாகும் ‘ நிமிர்ந்து நில்’ மற்றும் கல்யான் இயக்கத்தில் உருவாகும் ‘ பூலோகம் ‘ ஆகிய இரு படங்களிலும் எனக்கு சவாலான பாத்திரங்களே .அவை ரசிகர்களை நிச்சயம் கவரும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை ‘ என்றார் கண்களில் நம்பிக்கை ஒளிர..