நடிகர் விஷார் தற்போது “லத்தி” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் அறிவிப்பால் சர்ச்சை கிளம்பியுள்ளது.
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான “வீரமே வாகை சூடும்” படத்திற்குப்பின், தற்போது நடித்து வரும் படம் லத்தி. விஷாலின் நெருங்கிய நண்பர்கள், ரமணா மற்றும் நந்தா இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கியுள்ளார். “லத்தி” படத்தின் ரிலீஸ் தேதியை இயக்குனருக்கே தெரியாமல் தயாரிப்பாளர் நந்தா, ரமணா மற்றும் விஷால் வெளியிட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. படத்தின் அறிவிப்பு பற்றி இயக்குனர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.