விஷ்ணுவர்தன் இயக்கத்தில் சல்மான் கான்?

Filed under: சினிமா |

விஷ்ணுவர்தன் அஜீத்துக்கு “பில்லா” மற்றும் “ஆரம்பம்“ ஆகிய இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்தவர், மீண்டும் அஜீத் பட வாய்ப்புக்காக காத்திருந்தார். சமீபத்தில் விக்னேஷ் சிவன் அஜீத் 62வது படத்தில் இருந்து நீக்கப்பட்ட போது அந்த படத்தை இயக்க விஷ்ணுவர்தனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்பட்டது. ஆனால் அந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார்.

விஷ்ணுவர்தன் அதர்வாவின் தம்பி ஆகாஷ் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்துக்குப் பிறகு பாலிவுட்டில் சல்மான் கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை பிரபல இயக்குனர் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்று சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு ‘தி புல்” என்று தலைப்பு வைக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. விஷ்ணுவர்தன் இயக்கிய தி ஷேர்ஷா திரைப்படம் இந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.