‘விடுதலை” பாகம் 1ல் ஒளிப்பதிவாளரும் நடிகருமான ராஜீவ் மேனன் தனது திறமையான நடிப்பிற்கு பலரது பாராட்டுகளையும் பெற்றார்.
தற்போது ‘வெப்பன்’ திரைப்படத்தில் இன்னுமொரு அசரடிக்கும் நடிப்பைக் கொடுத்துள்ளார். சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘வெப்பன்’ திரைப்படம் அறிவியல் புனைக்கதை ஆக்ஷன் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது. குகன் சென்னியப்பன் இயக்கி இருக்கும் இந்தப் படம் ஜூன் 7, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். “இயக்குநர் குகன் இக்கதையை என்னிடம் சொன்னபோது கதையின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கை, தெளிவு மற்றும் சரியான நோக்கம் இதையெல்லாம் என்னால் உணர முடிந்தது. இக்கதையில் ஒரு வலுவான கதாபாத்திரத்திற்காக அவர் என்னை அணுகியது ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில், இந்த கதாபாத்திரத்தை பல முன்னணி நடிகர்கள் நடிக்க விரும்புவார்கள் என்பது எனக்குத் தெரியும். கதை மிகவும் உறுதியானதாக இருக்கும்போது நடிகர்களின் நடிப்புத் திறன் இன்னும் சிறப்பாக வெளிப்படும் என்பதை ‘வெப்பன்’ நிரூபித்துள்ளது. புதிய கால தொழில்நுட்பத்துடன் ஏஐ டெக்னாலஜியை சரியாக உபயோகப்படுத்தி உருவாக்கப்பட்ட திரைப்படம் இது. ’வெப்பன்’ பார்வையாளர்களுக்கு உற்சாகமான மெய்சிலிர்க்க வைக்கும் பல தருணங்களைக் கொண்டுள்ளது. ஜூன் 7 முதல் திரையரங்குகளில் படத்தை ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.