வெப்பம் குறித்து வானிலை ஆய்வுமையம் தகவல்!

Filed under: தமிழகம் |

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகசரித்து வருகிறது. இதனால் மக்களுக்கு மீண்டும் கோடை காலம் தொடங்கி விட்டதோ என்ற எண்ணம் ஏற்படும் அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்கள் வழக்கத்தை விட வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்றும் ஒரு சில இடங்களில் இயல்பிலிருந்து இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக பதிவாகும் என்று கூறப்படுகிறது. எனவே வெயில் நேரத்தில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.